 |
கட்டுரை
காதல் பத்மப்ரியா
நீ என்னைக் காதலிக்கிறாய்
எனவே வேறுவழியில்லாமல்
நானும் உன்னை காதலிக்கிறேன்.
பரஸ்பரம் நாம்
காதலிப்பது நிதர்சனமான உண்மை.
மழைக்கால மாலையில்
மெல்லிய விளக்கொளியில்
உணவகத்தில் அருகருகே நாம்
தட்டிலிருப்பதை நான் பார்க்க
தவிப்புடன் நீ என்னை பார்த்து
“காதல் உணவுக்கு எதிரியல்ல” -என
அன்பாய் பேசி ஆதரவாய் அமர்ந்தாய்
பாத்தி கட்டி விழுங்கும்
பக்கத்து மேசைக்காரரை சுட்டி
அமர்த்தலாய் புன்னகைத்தாய்
உன்னைக் காதலிப்பதால்
உனது அறிவுரையை
பரிசீலிக்க வேண்டிய
தார்மீகக் கடமை
எனக்குள்ளது
காதல் தெய்வீகமானதுதான் !
தாஜ்மகால் வந்ததே காதலால் தான் !
எல்லாம் தெரியும் - அதற்காக
உன்னைப்போல்
ப்ளாஸ்டிக் கவரோடு சேர்த்து
பீடாவை சாப்பிட
என்னால் முடியாது.
- பத்மப்ரியா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|