 |
கட்டுரை
பயணம் பத்மப்ரியா
இலைகளின் அசைவில் சோகம்
காற்றின் பயணத்தில் பெருமூச்சு
சருகின் வளைவுகளில் உயிர்ப்பு - என
குறிப்பால் உணர்த்துகிறாய்.
சிந்தனையற்று வெறுமை பெற
உன்னிடத்தில் அமர்கையில்
பரபரப்பாய் புகைவண்டி
கூட்டம் கலைந்ததும்
மீண்டும் மௌனத்தில் நாம்
மழை தூறும் மாலைப் பொழுதில்
உனக்கான வருகையில்
காற்றால் தழுவி சருகால் வருடி
சாரலைப் பரிசளித்தாய்
ஆலும் அரசுமே
நம் நண்பர்கள்
உன் மேல் காதலிருந்தாலும்
உனது நீண்ட நெடும் பாதையில்
உன்னுடன் இணைந்து
ஊர் எல்லைவரைதான் நான்
ஓடிவருவேன் -
பள்ளி செல்லும் பெண்பிள்ளைக்கு
ஆளில்லா ரயில் பாதையில் தனியே என்ன வேலை என்பார்களே.
- பத்மப்ரியா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|