 |
கட்டுரை
என்னதான் செய்வது பத்மப்ரியா
தூரத்திலிருந்து தூக்கி எறிய மனமில்லை
கொஞ்சம் உள்சென்று
விட்டுவிட்டு வரவும் துணிவில்லை
நாலணாவிற்கு நச்சரிக்கும் சிறுவரிடம்
தூக்கி கொடுக்கவும் விருப்பமில்லை
காலருகில் வைத்துவிடுவதும் சரியில்லை
ப்யூர் வெஜிடேரியனை
மீன்களுடன் சேர்ப்பதும் முறையில்லை.
என்னதான் செய்வது...!?
கடற்கரைக்கு வந்த பின்னும்
போகமாட்டேன் என்னும்
இந்த மண்ணு பிள்ளயாரை.
கவலை
விளக்கு வைக்கும் முன்
வீட்டுக் கிணற்றில் விழுந்த அவரும்
அவரது ஒரு ரூபாயும் -
இதோடு அடுத்த ஆண்டு தான்...
அவருக்கான பொரிவிளங்கா நாலு
பொரி அவல் கொஞ்சம்
முந்தானையில் முடிந்து கொண்டு
முந்தானை முடிச்சுக்கு
கிளம்பிய அம்மாவுக்கும், சித்திக்கும்
நிச்சயம் இருந்ததில்லை
பிள்ளயாரைக் கரைக்க
தண்ணீர் உள்ள
கிணற்றைத் தேடும் கவலை.
- பத்மப்ரியா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|