 |
கவிதை
பாண்டித்துரை கவிதைகள்
1.
சாலையை கடக்கமுற்பட்டபோது
விர்ரென்று சென்ற பேருந்தில்
சின்னவையொத்த முகச்சாயலில்
யாரோவா?
சின்னவா?
சின்னவை
இப்போது நினைக்காவிட்டால்
பிறகெப்போதும் நினைக்கப்போவதில்லை
***
2.
சிறு
தயக்கத்திற்கு பின்னர்
நீட்டிக்கப்பட்ட வாழ்க்கையில்
கேட்கக்கூடிய நபராக
அவர் இருந்திருக்கிறார்
***
3.
வண்ணாத்திப் பூச்சியின்
றெக்கை வெட்டப்பட்ட
குரூரம் நிரம்பிய
பால்யத்தின் பக்கங்களுக்கு அஞ்சி
முத்தங்கள் பற்றிய
கனவிற்காக
நாம் காத்திருக்கிறோம்.
***
4.
பொய்யான ஒன்றைபேசிக்கொண்டிருக்கிறேன்
பொய்யான ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பொய்யான ஒன்றை கேட்டுக் கொண்டிருக்கிறேன்
பொய்யான ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்
பொய்யான ஒன்றை........................................................................................
பாண்டித்துரை (சிங்கப்பூர்)
நன்றி: வடக்கு வாசல்
- பாண்டித்துரை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|