 |
கவிதை
குட்டிதேவதை பாண்டித்துரை
புன்னகையை சுமந்து வருகிறாள்
அறிமுகம் இல்லாமலே - என்
அகம் தொட எத்தனிக்கிறாள்.
எப்படியும் முடிகிறது - அவளின்
உலகத்தினுள் எனை கடத்த
ஜன்னல் வெளி பேசுகிறாள்
பறந்து சென்ற பறவைக்காக
அவள் சொன்ன கதைகளையெல்லாம்
டெடிபீர் பொம்மைகள்
எனக்கு தெரிந்திடாத வண்ணம்
எங்கே ஒளித்து வைத்துள்ளதோ!
முகத்தை சுழித்து நாக்கை துருத்தி
அவளுக்கான சில்மிசங்கள்
வெறுமையை ஆக்ரமிக்கிறது.
பொம்மையை தட்டிக்கொடுத்து
கண்ணயரச்செய்த பின்னே
பெரியமனுசி கொட்டாவி விடுகிறாள்
அவளுக்கான உலகில்
எண்ணற்ற ரகசியங்கள்
புதைந்து கிடக்கின்றன
எப்போதாவது ஒன்றுதான்
என்னால் தோண்டியெடுக்கப்படுகிறது.
- பாண்டித்துரை ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|