 |
கவிதை
நானும் எனது பொழுதுகளும் இரஞ்சித் பிரேதன்

நடக்கவிருந்த நிகழ்வுகள்
எந்தவித தாமதமின்றியும்
சிறு நெருடலின்றியும்
மெல்லமாய் மௌனமாய்
நடக்காமலே
எரிந்து சாம்பலாகுகிறது
யாரோ ஒருவரின்
நிராகரிப்பினால்.
நடக்கத் தொடங்கும் குழந்தைக்கு
நடை பரிட்சயமாகும்வரை
நடைவண்டி பலவருடங்களாய்
கிடைக்காமலே போகிறது.
முடிவுகள் தெரியாத
பயணங்கள் ஆரம்பமாகிவிடும்
நீண்ட ஒரு பொழுதொன்றில்
நெடுநாள் கடந்து வந்த தூரம்
அளந்துவிடும்படியாய் சற்று
விசாலமற்று கிடக்கின்றது.
சொல்லும் அளவுக்கு
சேமிப்பில் எதுவும்
உள்ளடங்கவில்லை
கனவுகளைத் தவிர.
தினமும் பொழுது
விடிகின்றது, சாய்கின்றது
இதற்கிடையில்
பயணம் கொள்கிறது
ஆசுவாசம் கொள்கிறது
மற்றும் நிறம் கொள்கிறது.
இதுவரை எதையும்
எனக்கென கொண்டுவந்ததில்லை
என்னுடைய பொழுதுகள்.
நானாவது இனி
எதையாவது கொண்டுபோக பார்க்கிறேன்
எனது பொழுதுகளுக்கு.
- இரஞ்சித் பிரேதன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|