 |
கவிதை
நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 09
எம்.ரிஷான் ஷெரீப்
மாய மந்திரங்கள் மிகைத்த வாழ்வின்
சுடரேற்றி வெளிச்சம் தந்த உன்னில்
காற்றைத் தூவி அணைத்திடத் துணியா
தேங்கிக் கிடக்கும் நீரில்
நீராடும் சிறு குருவியொத்த மனதுன்
காதல் கலந்து நிறைத்த மொழிகளை
எண்ணிச் சிலிர்த்து வாழ்கிறது
காதலின் நாளதைக் காவலுக்கு வைத்து
நீலத்தினொரு சாயலோடு சிவந்திருக்கும்
பொன்னந்தி மாலையொன்றிலுன்னழகிய
விரல்கள் கோர்த்து ஒளிரும்
வான் தாரகைகளின் தூரம்வரை
நாமிருவரும் நடந்தபடி
உன்னினிய வார்த்தைகளை
மின்னல் துண்டுகளின்
பிரகாசத்தோடான சிணுங்கல்களை
கேட்டிடும் ஆவலை இன்றும்
எழுதிக் காத்திருக்கிறேன்
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|