 |
கவிதை
நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 10
எம்.ரிஷான் ஷெரீப்
விரட்டித்தொடர்ந்து அலையடித்து
காதலின் எண்ண அலைகள்
ஈரலிக்கச் செய்யும் யௌவனத்தின்
பரந்தவெளியில் நின்றபடி என்
ஐம்புலன்களினது எல்லாத் தவிப்புகளையும்
அகிலத்தின் அனைத்து வர்ணங்களையும் தொட்டு
பேரெழில் ஓவியங்களாக வரைய முயல்கிறேன்
வர்ணங்கள் போதாமல் அடம்பிடித்து
தன்னில் ஒட்டிய வண்ண மைத்துளிகளை
வெளியெங்கும் தெளிக்கிறது
கவிதைகளால் செய்த தூரிகை
துளித்துளியாய்ப் பெய்யும்
வர்ணங்களின் மழையைத் தங்கள்
இறக்கைகளில் ஏந்தி உன்னிடம் வருகின்றன
வண்ணத்துப்பூச்சிகளும் பெரு விருட்சப்பறவைகளும்
தென்றல் தொட்டாலும் சிணுங்கும் பூச்செடி நீ
செட்டை, சிறகு தொடாமல்
என் ஏகாந்தம் சிந்திய
ஓவியங்களைப் பார்த்து ரசி
தனித்து வாடும் என் துயர் உணர்
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|