 |
கவிதை
நேசத்திற்குரிய ஒரே காதலுக்கு... - 14
எம்.ரிஷான் ஷெரீப்
வெட்கத்தையுமுன் மிகைத்திருக்கும் அழகையும்
ஒன்றாய்ப் பிசைந்து மௌனத்தால் தட்டி
என் பார்வையிலடித்துக் காய்த்து
எல்லாமொன்றாய் அடுக்கி மூட்டி
என்னிலேயே விறகென எரித்தாய்
நன்றாயெரியட்டுமென விட்டுப்பின்
அனுதினமும் அருகிலேயே நடமாடியென்
உயிரின் பதம் பார்த்தாய்
தெளிந்த நீரும் கறையற்ற நிலவுமென
என்னிதயம் கண்டதில்
கெட்டித்தனமாயுள் நுழைந்து
இறுக்கமாகப் பூட்டிக்கொண்டாய்
யாரும் தேடித் திறந்திடக் கூடாதென்ற
உறுதியான வேண்டுதலோடு நம்
காதல் நிரம்பிய தலை சுற்றிச் சாவியை
கால நெருப்புக்குள்
எறிந்திட்டாய் எரித்திட்டாய்
இனி எப்பொழுதும்
என் மனக்கதவு வழி எவளும் வராதபடி
அது பூட்டியே கிடக்கட்டும்
நானெங்கும் அசையா வண்ணம்
காதலுக்கும் காவலுக்கும்
உள்ளேயே உன்னை வைத்திரு
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|