 |
கவிதை
சொந்த வீட்டு அகதி சகாரா
ஒரு ஆத்மார்த்த தீண்டலுக்காய்
வருடக் கணக்கில் தவம்
கலைக்கப்பட்டதேயில்லை அது என்றுமே
யாராலும்..
அறை நிரப்பும் வெப்பக்காற்றை
அவளோடு சேர்ந்து சுவாசித்தறியும்
கட்டில் கம்பிகள்
ஜன்னலின் வழியே அவ்வப்போது தெரியும்
சின்னஞ்சிறு உலகம்
கனவில் மட்டுமே கரம் தொடும் மகன்
ஒளிந்து நின்று எட்டிப் பார்க்கும்
பேரக் குழந்தைகள்
தனியறை, தனிப்பொருள்கள்
துணையாய் தனிமை
இப்படியாய்
ஒட்டாமல் தான் இருக்கிறது
அவள் பாத்திரம் வீட்டினுள்
மனதிலும் தான்
- சகாரா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|