 |
கவிதை
முன்னிரவில் பெய்த மழை சமீலா யூசுப் அலி
நேற்று முன்னிரவில்
பெய்த மழை
இன்னும் ஈரலிக்கிறது!
உன்னுள்
வியர்வையாய்
துளிர்த்து சிலிர்த்ததென்
சுயம்...
மீண்டும் மீண்டும்
இன்னும் வேண்டும்
உன்
உயிரிலிடறும் புன்னகை...
என்அழகை
ஆராதிப்பதான
மொத்த சந்தோஷத்தை
வர்ஷித்து வரும்
உன் விழி வீச்சு.....
காதலின் காய்ச்சலில்
துவண்டு
போர்வைக்குள் நடுங்கியழும்
என் மனசு பாரடா...
நீ இருந்தும்
இல்லாமலான
வாழ்வு...
ஆனாலும்
நான்
சந்தோஷிக்கிறேன்..
.
உன்னோடு
வாழ்ந்த
ஞாபகக்குடையோடு
நடக்கிறேன்........
இனி மழை
உரத்துப்பெய்யட்டும்....
- சமீலா யூசுப் அலி, மாவனல்லை, இலங்கை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|