 |
கவிதை
மாற்றம்? சி.வ.தங்கையன்
தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை
ஏமாற்றி விடுகிறது
மக்கள் மனதில் மாற்றம் வராததால்.
ஆதங்கப்பட்டே அலுப்பு மிஞ்சுகிறது
மாற்றத்தின் திசை மாறிப் போனதால்.
அப்போதெல்லாம் 'கோஷம்' போட,
கூட்டம் கூட்ட
சாப்பாட்டுடன் லாரி சவாரி போதும்.
இப்போதோ 'குவாட்டர்' கொடுத்து
'சுமோ'வில் ஏற்றி
'பிரியானி'யுடன் தலைக்கு
நூறோ இருநூறோ தர வேண்டுமாம்.
அஞ்சு பத்துக்கு 'ஆ'வென்று
வாய் பிளந்தோர்
ஐநூறு ஆயிரத்திற்கு பேரம் பேசி
குடும்பம் குடும்பமாய்,
விழித்துக் கொண்டதாய் நினைத்து மகிழ்ந்து
விற்பனை செய்கிறார்கள்...
வாக்குச் சீட்டை.
பேனாக்களின் முனை தேய்ந்து போகவும்
தொண்டைகள் கிழிந்து ரத்தம் ஒழுகவும்
பாடுபட்டு வேண்டி நின்ற மாற்றத்தின் விபரம்
இப்படியா விளங்கிக் கொள்ளப் பட வேண்டும்?!
உண்மை மாற்றமும், விழிப்பின் பொருளும்
உணர வாக்காளர்கள் உயரும் வரையில்
அனல் காற்றுதான் இவர்கள் வீடுகளில்...!
அடை மழைதான் அவர்கள் காடுகளில்...!
- சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|