 |
கவிதை
உயிர் மெய்
தங்கம்
உயிர் மெய்
அதனின் சுவை அதற்கு
அதிர்சியளிப்பதாக இருந்தது
அதன் பிடியிலிருந்து
நழுவும் எண்ணம்
ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது
எப்பொழுதும்
தொடர முடியாத
உறவின் சலிப்பிலிருந்து...
வெளியேறின மொழியால்
அவரவர்களுக்கான உன்னதங்களை
படைத்துக் கொண்டன; அவைகள்
காதல் கடவுள் சமூகம் இயந்திரம்
மனிதமாய்...
தமிழ்
கிளர்ந்தெழுகிறேன்
உங்களால் வெளிப்படுத்தப்பட்ட காதலால்
வார்த்தைகளாயிற்று
என்னுடைய குரோதம்
உங்களுடைய பிரியத்தால்
உணர்கிறேன்
உங்களுடைய அதிர்வுகளை
பிரதிபலிக்கிறது சூழலின் உண்மை
சுவாசிக்கிறேன்
நெருக்கமாக உங்களின்
எழுத்து வடிவத்தை
- தங்கம் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|