 |
கவிதை
மரண ஓலங்களின் நடுவில் வாழ்தல் தியா
நெல் மணிகள் விதைத்து விளைந்த
வன்னி விளைநிலங்கள் தோறும்
துப்பாக்கி ரவைகளும் செல்களும்
விதைக்கப்படுகின்ற காட்சிகள்
அரங்கேறுகின்றன...
அப்பாவிச் சனங்களின் பிணங்களின் மீது
எழுதப்படுகின்ற வெற்றிச் செய்திகள்
வெடி கொளுத்தி மகிழ்தல்களுக்கு
அப்பாலும் நீண்டு செல்கிறது
கொடிய போர்...
மீண்டும் பெருநகரை
விழுங்கி ஏப்பம் விட்டபடி நகர்கின்றன
படைகள்
நவீன உலகில் குண்டுகள் விதைக்கும்
பரிசோதனைக் கூடமாகத்
தெரிவுசெய்யப்பட்ட
தமிழர் இருப்பிடங்கள் மீது
வேட்டை விமானங்கள்
மீண்டும் புதியவகைக் குண்டுகளை வீசி
பரிகசிக்கின்றபோது மறுபடியும்
உருக்குலைந்து சின்னாபின்னமாகின்றனர்
மனிதர்கள்
நாளாந்தம் பலியாவோர் காயமடைவோர்
பட்டியலில்
உறவுகளின் பெயர்களைத்
தேடி அலையும் அவலம் நிறைந்த
பயமனத்துடன் நீள்கிறது
புலம்பெயர்ந்தோர் இருப்பு
குருதி தெறித்து உடல்கள் சிதைந்து
நாளும் நீளும்
மரண ஓலங்களின் நடுவில்
இன்னும் வாழ்தல் வேண்டி
நடக்கிறது சீவியம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|