 |
கவிதை
நீ, நான் மற்றும் சிவப்பு ஆறு - TKB காந்தி
அழுதுகரைத்த உன் ஞாபகங்கங்களின்
ஒவ்வொரு துளியும் பெருகி
சகிக்காத ஒரு சிவப்பு ஆறாய்
என் எல்லா பாதைகளின் ஓரங்களிலும்
துரத்தி வந்தது
முதலில் மிரட்டியது
மிரண்டேன்
கட்டளையிட்டது
அடிபணிந்தேன்
பிறகு,
களிம்பு பூசிவிடும் நண்பனானேன்
கொஞ்சம் விழித்தேன்
அதன்பின்
கவனிப்பிற்காகவும் பிறகு அன்பிற்காகவும் கெஞ்சியது
உதாசினப்படுத்தினேன்
அழுதது.
இப்போது,
சிறு பையன்கள் மூத்திரம் போகும் சாக்கடையானது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|