 |
குணா கவிதைகள்
முறியும் கிளையில்
மலர்ந்திருக்கும் பூக்கள்
தேனீருக்குக் காசில்லாத
மழைநாள்
முகம்பதியவைத்துக் கொள்ளுமுன்
கடந்துவிடும் பேரழகிகள்
தாயற்ற சிசுவுக்கான
இரவல் தாலாட்டு
வாய்த்தும்
நிறைவில்லா புணர்ச்சி
போதாமைகளின் இடையில்
புன்னகைக்கிறார்
நம் கடவுள்
..........
பூவனத்தில் வாழ்கிறாள்
சூனியக்காரி
ஆதியிருள் மீத்திருக்கும்
குகையி-ருக்கிறாள் தேவதை
யாரேனும் ஒருவரை எதிர்பார்த்து
உச்சிக்கரட்டில்
உயிர் வைத்திருக்கிறான் அவன்
ஒரு குழந்தையாய் உருமாறி
அமுதம் நிரப்பிய கிண்ணத்தோடு
சூனியக்காரி அவன் முன்னிருக்கையில்
வனப்புமிகுந்த விலைமகளின் ரூபத்தில்
மாமிசத்தட்டை நீட்டுகிறாள் தேவதை
ஒன்றைக் கொள்ள மனமின்றி
இரண்டையுந் தேர்ந்தபின்
வாழ்ந்தே செத்துக்கொண்டிருக்கிறான்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|