 |
அரசியல் - இன்றும் தொடரும் இழிவு
ஆசிரியர் குழு
எஸ்.காமராஜ்
உதயசங்கர்
ஜே. ஷாஜகான்
உதயசங்கர்
சாம்பான்
ரா.ரமேஷ்
நிர்வாகக்குழு
ந. பெரியசாமி
ப. சிவகுமார்
ஆசிரியர்
சம்பு
சிறப்பாசிரியர்
ஆதவன் தீட்சண்யா
படைப்புகள் / நன்கொடை அனுப்ப:
PUTHU VISAI
B2, BSNL QUARTERS
HOSUR - 635109
TAMIL NADU
INDIA
[email protected]
புது விசை - முந்தைய இதழ்கள் |
இந்தியச் சமூகத்தில் நிலவும் சாதிய பாலின ஒடுக்கு முறை தலித்துகள், பழங்குடியினர், பிற்பட்டோர், பெண் கள் யாவரையும் சொத்தும் கல்வியுமில்லாது தாழ்த்தி விட்ட நிலையில் சொத்தும் கல்வியும் உள்ளவர்களே வாக்காளராக முடியும் என்ற நிபந்தனையை முன்னிறுத் துவது மோசடியானது என்று அம்பலப்படுத்திய அம்பேத்கர், வயது வந்தோர் யாவருக்கும் வாக்குரிமை என்பதே மக்களாட்சியின் அடிப்படை என்றார். வாழ் வுரிமை யாவும் மறுக்கப்பட்ட கடைக்கோடி மனிதர் களின் கையில் வாக்குரிமையாவது ஒரு ஆயுதமாக இருக்கட்டும் என்பதே அவரது நோக்கம்.
ஆனால் இன்று அந்த கடைக்கோடி மனிதர்கள் தமது வாக்குரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு அருகி வருகிறது. சமூக அங்கத்தவர் என்ற முறையில் அவர்களுக்குள்ள பிறவுரிமைகளை தட்டிப் பறித்ததைப் போலவே அவர்களது வாக்குரிமையையும் தட்டிப் பறிக்கும் சூதுகளின் களமாக மாறிவருகிறது தேர்தல். காசுக்கு கிடைக்கும் ஒரு பண்டத்தைப்போல வாக்காளர் களை அணுகத் துணிகிற கும்பல் கலாச்சாரம் அரசியலில் பெருகி பணபலம், வன்முறை, ஊடக வலு மூலமாக வாக்குரிமையின் நோக்கங்களைச் சிதைக்கிறது. தேர்தல் களத்திலிருந்து கொள்கை சார்ந்த விவாதங்களை பலவந்தமாக வெளியேற்றி, எல்லாவற்றையும் தனிநபர் சார்ந்த பிரச்னைகளாக மாற்றப் பார்க்கிறது. யார் வலு வான பிரதமர் என்று காங்கிரசும் பாஜகவும் நடத்துகிற குழாயடிச் சண்டையின் உட்பொருளும்கூட இதுதான்.
பட்டினிச்சாவுகள், கடன்சுமை, விவசாயிகள் தற்கொலை, தனிநபர் வருமானம் குறைவு, விலையேற்றம், பெருகிவரும் வேலையின்மை, இடப்பெயச்சி, தலித்துகள்-சிறுபான்மையினர் மீது அதிகரித்து வரும் வன்கொடுமைகள், கலாச்சாரக் காவலர்களாக வரித்துக் கொண்ட மத அடிப்படைவாதிகளின் வெறிச்செயல்கள், மகளிர் இடஒதுக்கீடு மறுப்பு, சமூகநீதிக்கு தொடரும் அச்சுறுத்தல்கள் என்று மக்களை நிம்மதியிழக்கச் செய்யும் பிரச்னைகளின் பட்டியலை வாசிப்பதற்கும் பொறுமையற்று அலுத்துக்கொள்ளும் இவ்விரு கட்சி களும் தங்களது ஆட்சிக்காலத்தை உள்நாட்டு பன்னாட்டு ஏகபோகங்களுக்கு சேவகம் செய்யவே பயன்படுத்தின.
குடிநீர், உணவு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும், சுயேச்சையான வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்கவும், விவசாயம், தொழில் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் ஒரு தற்சார்பு வளர்ச்சியை எட்டுவதற்குமான குறைந்தபட்ச செயல்திட்டத்தின்படி ஆட்சி செய்ய ஒப்புக்கொண்ட காங்கிரஸ், ஆதரவளித்த இடதுசாரிகளுக் கும் நாட்டுக்கும் துரோகம் செய்துவிட்டு அமெரிக்கா வின் கால் நக்க ஓடியது பழைய கதையல்ல. இன்றும் தொடரும் இழிவு.
இவ்வளவு பிரச்னைகளையும் எதிர்வரும் தேர்தல் தீர்த்து விடப் போவதில்லை. ஆனால் நிலைமை மேலும் மோசமாவதை உடனடியாய் தடுக்கவேண்டும் என்ற பதைப்பு கொண்டவர்கள் பிரச்னைகளுக்கு காரணமான கட்சி களை நிராகரிக்கவும், ஒரு மாற்றுத்தீர்வை முன்வைத்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசியல் விருப்புறுதியுடன் போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகளை ஆதரிக்கவும் முடியும்தானே?
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|