 |
கயர்லாஞ்சியில்... ஜொஷிவா தமிழி
தொரட்டி
மூங்கில் கழி
உன்குறி நுழைத்து
என்ன தேடுகிறாய்
என் சகோதரியின் யோனிக்குள்
விதர்பாவில் தொலைத்த உன் வீரத்தையா?
உன் விளைநிலத்தை
விதைகளை
தண்ணீரை
வன்புணர்ந்து திரியும்
மஹிகோ
மான்சாண்டோக்கள்
உன் வீரத்தையும் வேட்டையாடுகிறார்கள்
விதர்பாவின் தெருக்களெங்கும்
என்ன தேடுகிறாய்
என் சகோதரியின் யோனிக்குள்
உன்
சாதிய தினவுக்கு தீனி போடும்
கேடுகெட்ட அரசாங்கமோ
சிறப்புப் பொருளாதார மண்டலமெனும்
சிறைக்குள்
உன்னைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும்போது
நீ என்ன தேடுகிறாய்
என் சகோதரியின் யோனிக்குள்.
விரைத்தகுறி வளைத்து
உன் மலப்புழைக்குள் செருகி
‘ஜெய் ஹிந்த்’ பாரத் மாதாகி ஜே - என
போலி தேசிய முழக்கமிடும் ஆண்மகனே
நண்பன் யார் பகைவன் யார் எனத் தெரியாமல்
இருட்டில் பாயும் குருட்டுப் பூனையே
உன் வீரம் வெளிப்படும் களம்
என் சகோதரியின் யோனியென்று
யாருனக்கு போதித்தது?
‘வெண்மணியே’ தேசமாய்
விரிந்து நிற்கும் இப்பூமி
பற்றி எரிவதொன்றே தீர்வென்றால்
தீக்கங்குகள் பீறிட்டுக் கிளம்பும்
என் சகோதரியின் யோனிக்குள்ளிருந்து.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|