 |
அவனும் கடவுளும்
வா.மு.கோமு
கடவுளைக் கொல்வதற்கான
விஷ மருந்தொன்றை
பூச்சி மருந்துக் கடையில்
பொட்டணமாக கட்டிக் கொண்டான்.
சாப்பாட்டிலோ ஏனைய பதார்த்தத்திலோ
மருந்தை சரிவிகிதமாய்க் கலந்து
கடவுள் நடமாடும் இடங்களில்
வைத்துவிட வேண்டும் என்றும்
கடைக்காரரால் அறிவுறுத்தப்பட்டிருந்தான்.
அவ்விதமே அவன் செய்தும்
கடவுளானவர் விஷங் கலந்த உணவை
நுகர்ந்து பார்க்கக் கூட மறுத்து
வீட்டின் தாவாரத்தில் ஓடிக்கொண்டிருந்தார்.
கடவுளானவர் தக்காளிப் பழங்களையும்
கேரட்டுகளையுமே விரும்பி உண்ணுகிறார்.
கடவுளை வேறு வழியன்றில்
கொன்றுவிட எண்ணி
கடவுளை அடைக்கும் பெட்டி ஒன்றை
வாங்கி வந்தான்-இடுக்கியில்
தேங்காயை குத்தி பெட்டியின் வாயில்
உயர்த்தி பாதுகாப்பாய் பரண்மீது
வைத்து விட்டான் மறுநாள்.
காலையில் கடவுளானவர் அதனுள்
கத்தியபடி அடைபட்டுக் கிடந்தார்.
இப்படித்தான் முதல் கடவுள்
அவனிடம் சிக்கிச் சீரழிந்தார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|