லெஸ்மிசரபில் 1862ல் வெளிவந்த நாவல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரான்ஸ் நாட்டின் ஒரு பகுதி விளிம்பு நிலை மக்களைப் பற்றி பேசும் நாவலாகும்.. அப்போதைய பாரிஸ் நகரத்து புறநகரில் வாழும் விளிம்பு நிலை மக்கள் பற்றியதும், அந்நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கை, நீதித்துறை, குற்ற பின்னணிகள் போன்றவற்றை பற்றியும் அந்த நாவல் பேசியது.

வால் ஜின் என்ற சாதாரண மனிதன் பல தொழில்கள் செய்து அந்த நகரத்தின் மேயராகவும் ஆகிறான். பல திருட்டு குற்றங்கள் அந்த நகரத்தில் நடக்கிறது அதிலிருந்து அவன் விலகி நின்றாலும் அவனின் பழைய வாழ்க்கையை காட்டும் பலர் இருக்கவே செய்கிறார்கள். இந்த நாவலில் வரும் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பல திரைப்படங்களில் வந்திருக்கிறார். தேவாலயத்திற்கு திருடுவதற்காக வந்துவிட்டு அப்படி திருட்டு பொருட்களை தப்பிக்கும் போது அவனை காவல்துறையில் பிடிபடுகிறது கிறிஸ்துவ பாதிரியார் அந்த பொருட்கள் எல்லாம் அவனுக்கு தான் கொடுத்தது என்று சொல்லி அவரை குற்றத்தில் இருந்து வெளியேறுகிறார்.

இந்த கதாபாத்திரத்தை பல தமிழ் மற்றும் இந்திய படங்களில் கூட நாம் காணலாம். திருட்டுக்குற்றத்திற்காக சிறைக்குச் செல்பவன் செய்யும் தவறு பசிக்காகத் திருடுவதுதான். சிறையில் இருந்து வெளியே வருபவன் ஒரு நல்ல படுக்கையில் தூங்குவது தனது ஆசை என்கிறான். பாதிரியார் சாதாரண ஆசைதானே. நான் இடம் கொடுக்கிறேன் என்கிறார். அவன் ஆசையோடு தூங்கும் இடத்தில்தான் அந்தத் திருட்டு நடக்கிறது. லெஸ் மிசரபில் படம் கூட இந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பல உலக மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது.

தமிழில் ஏழை படும் பாடு என்ற தலைப்பில் நாவலாக கூட வந்திருக்கிறது அந்த நாவலை ஒட்டி பல திரைப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன அப்படி ஒரு திரைப்பட முயற்சியில் அந்த திருடன் புதிய வாழ்க்கையை வாழ்கிறான், சின்ன நகரத்தில் பெரிய வியாபாரியாக, ஒரு மேயர் என்ற அளவில் கூட அவனுடைய பதவி உயர்கிறது. ஆனால் காவல்துறை அவனை வேறு பார்வையில் தான் பார்த்துக் கொண்டே இருக்கிறது இந்த வகைப் படங்கள் நிறைய அந்த நாவலை ஒட்டி வெளிவந்திருக்கின்றன.

இப்போது வெகு சமயத்தில் இந்த நாவல் தலைப்பு வைத்துக்கொண்டு ஒரு முக்கியமான படம் வெளியாகிறது 2018 இல் உலக கோப்பையில் பிரான்ஸ் வெற்றி பெற்ற பின்னால் நடக்கும் சில நிகழ்வுகள் இந்த படத்தில் மையமாய் இருக்கின்றன. ஸ்டீபன் என்ற காவல் துறை அதிகாரி பாரிசுக்கு வந்து சேர்கிறார். குற்றப்பிரிவு அதிகாரியாக அவர் சிலருடன் இணைகிறான். அந்த குழுவில் கூடிய கிரிஷ் என்ற காவல்துறை அதிகாரி சிறு வயது குழந்தைகளை சீண்டுகிறவன், தண்டிப்பவன்.

அது சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடும்போது அவன் பல வகைகளில் விமர்சிக்கப்படுகிறான் அந்த குழுவில் இருக்கும் இன்னொருவனுக்கு குழந்தைகள் மீதான வெறுப்பு முயற்சி எல்லாம் தேவையில்லாததாக இருக்கிறது.. அவர்களுடைய பார்வையில் இசா என்ற சிறுவன் விழுகிறான். அவன் முன்பே சிறு குற்றங்களுக்காகத் தற்காலிக மறுவாழ்வு இல்லங்களுக்குச் சென்று திரும்பியவன். ஒரு சர்க்கஸில் சிங்கக்குட்டி காணாமல் போகிறது அதுதான் அப்போது அந்த காவல்துறை குழுவின் பார்வையில் படுகிறது. அந்த சிங்க குட்டியோடு இசா இருக்கும் ஒரு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் கிடைக்கிறது. அதை ஒட்டி இசாவைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள் ஆனால் அவன் அந்த சிங்கக்குட்டி ஓடிப் போய்விட்டதாக சொல்கிறான். அந்த சிங்கக் குட்டியை தேடும் முயற்சியில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். இசாவின் கூட இருப்பவர்கள் இந்த காவல்துறையின் இந்த பணியின் போது கொஞ்சம் முட்டுக்கட்டை போடத்தாக்குதல் நடத்தப்படுகிறது. இசா அடிபடுகிறான்.

ஆனால் இசாவை மருத்துவமனையில் சேர்க்க கூட அவர்கள் ஆர்வம் காட்டாத போது ஸ்டீபன் அவனை ஒரு மருத்துவமனையில் சேர்த்து அவனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறான் அதேசமயம் அங்கு நடந்த விஷயங்களை டிரோன் மூலமாக ஒரு சிறுவன் படம் பிடித்திருப்பது தெரிகிறது அவனைத் தேடிப் போய் அந்த டிரோன் சிம் கார்டை பெறுவதில் அந்தக்காவல் துறைக்குழு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். இசாவின் காயமடைந்த நிலையோ உயிருக்கு போராடும் நிலையோ அவர்களுக்கு அவர்களுக்கு இரண்டாம் பட்சம் ஆகி விடுகிறது. டிரோனில் படம்பிடிக்கப்பட்ட இசாவை துரத்தும் காட்சிகள் அவனுக்கு ஏற்பட்ட நிலை இதையெல்லாம் தாண்டி படம்பிடித்த சிறுவனிடமிருந்து மாஸ்டர் கார்டு பெறுவது தான் அவர்களின் முக்கிய வேலையாக இருக்கிறது.

இந்த சூழலில் அந்த சிங்கக்குட்டி கண்டுபிடிக்கப்பட அதை சர்க்கஸில் கொண்டுபோய் விடுகிறார்கள். அந்த முதலாளி இசாவை தாய்ச் சிங்கத்திற்கு பலி கொடுப்படுப்பது போல பாவனை செய்ய அது பெரும் சிக்கலாகிறது அவனிடமிருந்து இசாவை காப்பாற்றி காவல்துறை சர்க்கசிலிருந்து வெளியே வருகிறது. சிங்கக் குட்டியை ஒப்படைத்து விட்டது அக்குழு. இப்போது அந்த டிரோனின் சிம் கார்டு தேவையாக இருக்கிறது. அந்தப் பையன் அடைக்கலமான இடம் ஒரு அரசியல் ரீதியான அதிகாரம் பெற்ற ஒருவரின் கடையாக இருக்கிறது. அவரிடமும் மதவாதிகளிடமும் காவல்துறையினர் தங்களுக்கு தேவையானதை சொல்கிறார்கள் அப்படித்தான் அந்த சிம்கார்டு ஒரு காவல்துறை அதிகாரியின் கையில் அகப்படுகிறது.

அவர் அதை மக்களுக்கு எதிராக பயன்படுத்துவார் என்று ஒரு குழப்பமும் இருக்கிறது. இந்த நிலையில் அந்த காவல்துறை அதிகாரிகள் அடுத்த நாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது காயம்பட்ட இசாவும் அவன் கூட்டாளிகளும் சேர்ந்து காவல்துறை குழுவைத் தாக்குகிறார்கள். அந்தத் தாக்குதலிருந்து காவல்துறை தடுப்பதும் சிறுவர்களுடைய உச்சபட்ச வன்முறையும் படத்தின் இறுதி காட்சிகளாக அமைகின்றன. குழந்தைத் தன்மை மீறி அந்த சிறுவர்கள் செயல்படும் வன்முறை காட்சிகள் அபாயகரமானவை. அதை எதிர்கொள்கிற காவல்துறை அவர்களை எந்த வகையிலும் காயப்படுத்தி கூடாது என்று ஜாக்கிரதையாகத் தான் இருக்கிறார்கள்.

ஆனால் எல்லாம் கை மீறிப் போகிறது இந்த விசனத்தை இந்த படம் கைக் கொண்டிருக்கிறது. குழந்தைகளின் மன நிலைமை மீறி எழும் சூழல்கள் அபாயகரமானவை. விக்டர் ஹியூகோவின் நாவல் தலைப்பு, அந்த நாவல் காட்டிய பிரதேசம் ஆகியவை எடுத்தாளப்பட்டு இன்றைய நவீன வாழ்க்கை பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் மூலம் முன்வைக்கப்படுகிறது சிறுவர் மத்தியில் ஒளிந்திருக்கும் வன்முறை உணர்வுகள், அதை அவர்கள் வெளிப்படுத்தும் முறை. , குற்ற சமூகமாக சிறுவர்கள் இருப்பதும் சொல்லப்படுகிறது காவல்துறையின் அதிகாரமும் வன்முறையும் கொண்ட முகத்திலிருந்து மாறுபட்டு இன்னொரு முகமாய் சிறுவர்கள் வன்முறையோடு தங்களை வெளிக்காட்டுகிறார்கள்.

இன்றைய சிறுவர்கள் சார்ந்த உலகத்தை இந்த படத்தின் மூலம் எதிர்கொள்வது சிரமமாகத்தான் இருக்கிறது. சிறுவர் சார்ந்த அதி தீவிர வன்முறை உணர்வுகளை இந்தப்படம் பிரதிபலிக்கிறது. நாவலின் காலகட்டமும் இன்றைய காலகட்டத்தின் போக்குகளையும் எடுத்துக் கொண்டு பார்க்கிறபோது அன்றைக்கிருந்த சாதாரண குற்றப்பின்னணி சம்பவங்கள் கருணை அன்பு இவையெல்லாம் மாறிப்போய் உச்சபட்ச வன்முறைக்குள் இந்த உலகம் இருப்பதை இந்த படம் காட்டுகிறது.

பல்வேறு திரை வடிவங்களை கொண்டிருக்கிற அந்த நாவல் பழைய படங்களிலிருந்து வேறுபட்டு உச்சபட்சமான வன்முறைகளும் அது சார்ந்த சிறுவர் உலகத்தையும் முன்வைக்கும் ஒரு முக்கிய படமாக இவ்வாண்டில் ஒரு பிரதியாக படம் வெளிவந்திருக்கிறது. இன்னும் பல வடிவங்களை அந்த நாவல் எடுக்கக்கூடும். அப்போது அந்த நாவல் எழுப்பும் குற்றப் பின்னணி, அன்பு இரக்கம் சார்ந்த விஷயங்களும் மற்றவருடன் பகிர்ந்து கொள்ளப்படும் அதற்கான நல்ல சாட்சியாக இந்த படம் இருக்கிறது

- ஆல்பா

Pin It