அடிப்போம், உடைப்போம் என்பதுவே இன்றைய அரசியலின் அடிப்படையாகப் போய்விட்டது! அந்த வரிசையில் இப்போது அண்ணாமலையும் சேர்ந்திருக்கிறார்.

தன் மாநிலத் தலைவர் பதவி பறிபோக இருக்கிறதோ என்கிற அச்சமும், அண்ணாமலையின் பதற்றத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம்! பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டு, நயினார் நாகேந்திரனைத் தலைவர் ஆக்கப் போகிறார்கள் என்னும் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.anna arivalayam 444ஹெச். ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி, தமிழிசை ஆகியோரும் அந்தப் பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்! அது அவர்கள் உட்கட்சிப் பிரச்சனை. யாரை நியமித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக எழ முடியாது என்பது நாடறிந்த செய்தி !

எனவே இந்தத் தருணத்தில், திமுகவுக்கு எதிராகக் கூடுதல் கடுமை காட்டினால், தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று அண்ணாமலை கருதுகிறார் போலிருக்கிறது! அதற்காகவே அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் விடமாட்டேன் என்று வீர வசனம் பேசி இருக்கிறார்! உங்களால் அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லைக் கூடப் புடுங்க முடியாது என்று அதற்கு ஆர். எஸ். பாரதி பதிலடி கொடுத்திருக்கிறார்!

அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லும், கலைஞரின் கண் பட்டு எழுந்திருக்கிறது! அந்தக் கட்டிடம், கலைஞரின் கனவு! கழகத்தின் உணர்வு!!

சென்னை ராயபுரத்தில் ஒரு சிறிய வீட்டில் தொடங்கப்பட்டு, அறிவகமாகி, பிறகு அன்பகமாகி, இன்று அண்ணா அறிவாலயமாகக் கழகத்தின் தலைமை நிலையம் உயர்ந்து நிற்கிறது!

அண்ணா அறிவாலயத்தில் வரலாற்றை உள்ளே பொதிந்து கிடக்கும் இது யாகத் தழும்புகளை கொள்கை செறிவை முழுமையாக நிமிர்ந்து பார்க்க அண்ணாமலையின் உயரம் போதாது!

அண்ணாமலைகள் வருவார்கள்! அண்ணாமலைகள் போவார்கள்! அண்ணா அறிவாலயம் என்றென்றும், தனித்து நிற்கும் .... நிலைத்து நிற்கும்!

- சுப.வீரபாண்டியன்