ஒரு கட்சியின் பொதுக்குழுவிற்கும், பொதுக்கூட்டத்திற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு! பொதுக்குழு என்பது அமைப்பைக் கட்டி எழுப்புவதும், வரும் ஆண்டிற்கான வேலைத் திட்டங்களை முடிவு செய்வதுவாக அமையும்!
அரசியல் விமர்சனங்களும் கண்டிப்பாக இடம்பெறும். ஆனால் தவெக வின் பொதுக்குழு ஒரு பொதுக்கூட்டமாக நடந்திருக்கிறது!
கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இறுதியாக உரையாற்றும் போது, நேரடியாகத் திமுகவைத் தாக்கிப் பேசி இருக்கிறார்! ஒரு குடும்பம் ஒரு நாட்டையே சுரண்டுகிறது என்கிற அளவுக்கு, ஒரு மலிவான அரசியலை முன் வைத்திருக்கிறார். பாம்புக்கும் வலிக்காமல், தடிக்கும் நோவாமல், பிஜேபியை அடிப்பது போல ஒரு பாசாங்கும் செய்திருக்கிறார்!
2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து, துணை முதல்வராக ஆவது விஜயின் ஒரு திட்டமாக இருக்கலாம்! அல்லது, அவரே குறிப்பிட்டு இருப்பது போல, ரகசிய முதலாளியின் ஆணைப்படி தனியாக நின்று, சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிப்பது, அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையாக இருக்கலாம்!
நடைமுறையில் இரண்டுமே நடக்கப் போவதில்லை என்பதை, விஜய் கால ஓட்டத்தில் உணர்வார் !
மும்மொழித் திட்ட எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்புத் திட்ட எதிர்ப்பு ஆகியன அவர் பேச்சில் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் அவற்றுக்கெல்லாம் அவர் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. மேலோட்டமாக மட்டுமே சொல்லிச் சென்றார் !
தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் பல கூத்துகள் அரங்கேறும்! கூட்டணிகள் திசை மாறும் !
எது நடந்தாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று , மீண்டும் ஆட்சியை அமைக்கப் போவது திமு கழகம்தான் என்பதை 2026 எடுத்துச் சொல்லும்!
திமுக போராடும்!
திமுக வெல்லும்!!
- சுப.வீரபாண்டியன்