சென்னை கொளத்தூர்:
ஈழ விடுதலை நெருப்பில் தன்னுயிர் தந்த முத்துக்குமார் நினைவேந்தல் சென்னை கொளத்தூரில் 29.01.2020 காலை நடைபெற்றது. மதிமுக தலைவர் வைகோ சுடரேற்றித் தொடங்கி வைத்தார். உலகத் தமிழ்ப் பேரவை தலைவர் நெடுமாறன் முத்துக்குமார் சிலையைத் திறந்து வைத்தார்.
பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் தோழர் மகிழன், தோழர் ஜீவானந்தம் உட்படத் தோழர்கள் கலந்து கொண்டு முத்துக்குமாருக்குச் செவ்வனக்கம் செலுத்தியதோடு தமிழீழ விடுதலைக்கு உறுதியாகத் துணை நிற்போம் என்று உறுதி ஏற்றனர்..தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூண் இடிப்பைக் கண்டிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. தோழர் கலைச்செல்வன் எழுதி தமிழ்த் தேசம் சார்பில் நாம் வெளியிட்ட “முத்துக்குமார் – நெருப்பாய் வாழ்ந்தவன்” நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது.
கொழுவைநல்லூர்:
முத்துக்குமாரின் சொந்த ஊராகிய கொழுவைநல்லூரில் முத்துக்குமார் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற ஈகி முத்துக்குமார் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் தோழர் ஆ.கலைச்செல்வனின் முத்துக்குமார் – நெருப்பாய் வாழ்ந்தவன் நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது.
முத்துக்குமார் – நெருப்பாய் வாழ்ந்தவன்
ஆசிரியர்: ஆ, கலைச்செல்வன்
முதல் பதிப்பு, 2010: தமிழ்த்தேசம் வெளியீடு.
இரண்டாம் பதிப்பு, 2021: தென்குமரி பதிப்பகம்,
86A, Phase I, Lane II, Le Chalet,
மேவளூர்குப்பம், காஞ்சிபுரம் மாவட்டம் - 602 105
thenkumari_
தொலைபேசி: 9176992001.
விலை: ரூ. 160/-.
- தியாகு