மழை மீதான
மேல்முறையீட்டில்
வெயிலின் கருணை மனு
நிராகரிக்கப்படுவதோடு...
இருளின் சத்தியங்களை
அலட்சியமாக மீறுகின்றன
ஆளரவமற்ற தெரு விளக்குகள்.
வாழ்வதாக சொல்லும் தருணங்களையெல்லாம்
சுழித்துக் கொண்டு ஓடுவதாகத் தோன்றுகிறது
நகரத்து மழையின் கசடுகள்..
மனச் சதுக்கத்தின்
மத்தியில்
கையகலக் குழிப் பறித்து
அடித்தளம் பூசும் வெயில் மீது
கொஞ்சமாய்த் தங்கிவிடுகிறது
மழைத் தருணங்களின் வண்டல்கள்..!
- இளங்கோ (