
குஞ்சுகளுக்கு இரையோடு
குழந்தைகள் வீடுதிரும்புகின்றன
தாய்க்குச் சொல்லக் கதைகளோடு.
பொம்மைகளோடும்
பேசுகின்றன குழந்தைகள்
குழந்தைகளோடும்
பேசுவதில்லை நாம்.
அடித்த தாயையே
கட்டிக்கொண்டழுகிறது
ஆறுதல் சொன்னவர்களை
விட்டுவிலகியோடுகிறது.
குழந்தைகள் உறக்கத்தில் முணுமுணுக்கின்றன
தேவதைகளின் கதைகளை வாசிக்கின்றன.
- ரவி உதயன் (