கொஞ்சமாவது
மிச்சப்பட்டிருக்கட்டும்
ஆகாயப்பறவைகள்
மீண்டும் வருவார்கள்
அன்னியப்பறவைகளுக்கும்
தெரிந்திருக்கிறது
உன் கூடு
வாசலற்றதென்று
பொரிப்பதற்கான
முட்டைகளை
உடைத்தெறியும் வலி
இப்போது மட்டும்தான்
மரபணுக்கள்கூட
உனக்கானது
உன்னிடமே இருக்கட்டும்
அல்லது
வரப்போகும் ஒரு நாளில்
உன் குஞ்சுகளை
அவர்கள் கவ்விச் செல்வார்கள்
நீ உன் கூட்டைச் சிதைப்பாய்
ஆகாயப்பறவைகள்
ஏமாற்றத்தின் கவிதைகளை
வெண் மேகங்களில்
எழுதிவிட்டுச் செல்வார்கள்
மேகங்கள் நெடுங்காலம்
அழுதுகொண்டிருக்கும் ....
அதனால் உனக்கானதாய்
கொஞ்சமாவது
மிச்சப்படுத்திக்கொள்....
ஆகாயப்பறவைகள்
மீண்டும் வருவார்கள் ..
- கலாசுரன் (