என் மனவெளியில்
உன் இதழ்கள்
எட்டாத தூரத்தை
நொடிகளில் எட்டிவிட்டது
உன் கண்ணீர்...
இனி வியாசனிடம்
வரம் பெற்றும்கூட
உன் இதழ்களால்
கடக்க இயலாது
அந்த தூரத்தை...
சிறையெடுப்பதில் கூட
அஹிம்சை வழிதானா உன்னுடையது...
உன் இதழ்களுக்குக்
கட்டுப்பட விரும்பவில்லை...
உன் கண்ணீருக்குக்
கட்டுப்படாமல் இருக்கமுடியவில்லை...
இது சத்தியமாய்க்
காமமல்ல என்பதில்
தளும்பி வழிகிறது காதல்
என் நெஞ்சுக்கூட்டிற்குள்...
- ராம்ப்ரசாத், சென்னை (