அடர்ந்த கானகத்தில்
வழக்கமாய்க் கேட்கும்
பழக்கப்பட்ட ஒலிகளைப்
புறந்தள்ளிவிட்டு தூரத்தில் வீழ்வதான
ஒரு நீர்வீழ்ச்சியின்
சன்னமான முனகலை ஒத்த
ஒரு முனகல் என் வீட்டு
சமையலறையிலும் கேட்டுக்கொண்டிருந்தது...
அது திருகலில் மிச்சம் வைக்கப்பட்ட
தண்ணீர்க் குழாயாக இருக்கலாமென்பதில்
முளைத்துவிடுகிறது ஒரு ஆயாசம்...
அந்த முனகலின் மேலொரு ரசனைக்குப்
பின்னால் ஒளிந்து கொள்கிறது
திருட்டுத்தனமாய் கொஞ்சம் சோம்பல்...
சோம்பலை மிச்சம் வைத்து
திருகலை முழுமைசெய்ய
எத்தனிக்கையில் நின்றே விடுகிறது
அந்த முனகல்...
- ராம்ப்ரசாத் சென்னை (