நான் வர்ற வரைக்கும்
வெளியே போக கூடாது..
சொல்லி வெளியே சென்ற
அப்பனைக் காணோம்...
(பின்குறிப்பு: காணாமல் போனவர்கள் பட்டியலில்
தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை)
அப்பனை தேடிட்டு வர்றேன்
சென்ற அண்ணன் எலும்புக் கூடாய்...
அடையாளம் காட்டச் சென்ற அம்மா
பேசி பல நாட்களாயிட்டு....
விசாரிக்க வந்த ஆர்மிக்காரன்
அழைத்துச் சென்றான் அக்காவை..
(பின்குறிப்பு: பல மாதங்களுக்குப் பின்பு)
மனநிலை பிறழ்ந்த நிலையில் அக்கா
மூச்சடைத்து இறந்தாள் அம்மா
மிச்சமிருப்பது நான் மட்டுமே...
அம்மணமாய் நிற்கிறேன்
அப்பனைப் போல...
அண்ணனைப் போல...
(இந்த பூகோள அமைப்பில் ஏதோ ஒரு புள்ளியில் வாழும் அப்பாவி மனிதனுக்காக..... எனது மொழியில்...)
- ஐயப்பன் (