கடவுளின்
வியர்வைத்துளி தான் சாத்தான்
என்ற
விவாத இரவுக்கு பின்
என் நாவில்
அவன் உப்புக் கரிக்கிறான்
மனதில் முட்களாய் முளைக்கிறான்
கனவின் படுதாவை உதறிப் பிய்க்கிறான்
என்
சமவெளியெங்கும்
சுவர்கள் எழுப்பி
அதில் தன் எச்சில் கொண்டு
வர்ணம் பூசுகிறான்..
சாத்தான் இடையறாது உழைக்கிறான்
அவன் உடலில்
பெருகும் வியர்வைத்துளியில்
கடவுள் மின்னும்போது..
வானம் இடிய சிரிக்கிறான்..
****
- இளங்கோ
கீற்றில் தேட...
சமவெளியெங்கும் சுவர்கள்..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்