கீற்றில் தேட...

இந்த கவிதையின் வரிகள்
உங்களுக்கானதாகவும் இருக்கலாம்..
ஒரு துயரத்தின் தோற்றத்திற்கு
உங்களின் ஒரு சொல்லோ..
ஒரு மகிழ்வின் கதவடைப்பிற்கு
உங்களின் ஒரு பார்வையோ
காரணமாக இருக்கலாம்..
திரும்பிச் செல்லுங்கள்..
எந்த சொல்லால் துயரத்தை
விதைத்தீர்களோ அதற்கு மாற்றுச் சொல்லால்
அதை துடைத்தெடுங்கள்..
எந்த பார்வையால் மகிழ்ச்சியின் வேரை
பறித்தீர்களோ அதற்கு மாற்றுப் பார்வையால்
அதற்கு நீருற்றுங்கள்..
இந்த கவிதையின் வரிகள்
உங்களுக்கானதாகவும் இருக்கலாம்
அல்லது
நீங்கள் தினமும் சந்தித்து கொண்டிருக்கிற
ஒருவருக்காகவும்  இருக்கலாம்..