கீற்றில் தேட...

தன் கூட்டுக் கண்களால்

ஒரு சேர பார்க்கிறது...
காதல்
உன் மௌனத்தையும்
என் வலியையும்.
==========
வாழ்க்கை முரண்களால் ஆனது..
உன் காதலற்ற நட்பையும்
என் நட்பான காதலையும் போல..
=========
நானில்லாத இந்த பெரும் உலகம்
இப்போது போலவே இருக்கும்
உன் வாழ்க்கைப் பயணத்தினூடே..
நீயில்லாத இந்த சிறு உலகம்
இனி எப்போதும் இருக்காது
என் சாபத்திற்குப் பின்..