உள்ளுக்குள் அமுதமும்
வெளியில் விஷமும்
கொண்ட தேவசாத்தான் நீ..
உள்ளுக்குள் விஷமும்
வெளியில் அமுதமும்
கொண்ட மோகினி தேவதை நான்
உன் அமுதம்
என் விஷத்தோடும்
உன் விஷம்
என் அமுதத்தோடும்
கலக்கும் போது
எல்லா விஷத்தையும்
முறித்துவிட்டு
எஞ்சியிருக்கும் அமுதம்..
கீற்றில் தேட...
அமுதமும், விஷமும்
- விவரங்கள்
- இசை ப்ரியா
- பிரிவு: கவிதைகள்