எதுவும் முடிந்துவிட வில்லை..
இதுவரை விதைத்த சொற்கள்..
பரிமாறப்பட்ட உணர்வுகள்
புன்னைகைத்திருந்த இரவுகள்
விழித்திருக்கும் நம்பிக்கைகள்
தீராத கனவுகள்
திசைமாறா நேசம்
எதுவும் முடிந்துவிடுவதில்லை..
செலவழிக்க செலவழிக்க
சேர்ந்துகொண்டே இருப்பவை..
ஞாபகங்களின் அட்சயப்பாத்திரத்தில்
கீற்றில் தேட...
ஞாபகங்களின் அட்சயப்பாத்திரம்
- விவரங்கள்
- இசை ப்ரியா
- பிரிவு: கவிதைகள்