சிந்தை தூண்டும்
விந்தை உலகம்,
கடல்...
நுரையை உறிஞ்சிக்
குடிக்கிறது கரை...
கரையை உறிஞ்சி
நுரைக்கிறது கடல்...
வேடிக்கை...
கரையை நனைத்ததை
அடிக்கடி மறக்கிறது...
மறந்ததை நினைவூட்டி
மீண்டும் நனைக்கிறது...
விளையாட்டு...
விந்தைத்தாய் கடல்...
எதனோடு மையல் கொண்டு
சூறாவளியை பெற்றுப்போடுகிறாளோ...
அதனோடே காதல் கொண்டு
கண்ணீர் மழையாகிறாள்...
நுரைத்து நரைத்து கிழமாகிறதோ...
நரைத்து நுரைத்து கிழவேடந்தரிக்கிறதோ...
- ராம்ப்ரசாத் சென்னை (