பால்கனியில் பூத்திருந்த
பால் நிலா பொட்டு வைத்த
இரவுத்தாரகையைக் காட்டிக்காட்டி
குழந்தைக்கு சோறூட்டுகிறாள் தாய்...
செங்கல் காட்டுப்பாதைகளில்
தவறவிட்ட தாயைத்தேடும்
நாய்க்குட்டிகளின் பசிக்காய்
பாதிக்கவளம் நிலாச்சோற்றை
தவறவிடுகிறாள் மழலைத்தேவதை...
- ராம்ப்ரசாத் சென்னை (