தண்ணீர் என்பது
நிலத்தூரிகை கொண்டு
உலகை வரைந்த
அற்புதமான ஓவியச்சி...
தண்ணீர் சூழ்ந்து, தனியானது
ஆஸ்திரேலிய கண்டம்...
தண்ணீர் புகுந்து, தேடப்பட்டது
அமேரிக்க கண்டம்...
தண்ணீர் உதிர்ந்தால் தூரல்...
தண்ணீர் குளித்தால் மழை...
தண்ணீர் நியூட்டனை எதிர்த்தால் மேகம்...
தண்ணீர் தண்ணீருடன் சினேகித்தால் கடல்...
மொத்தத்தில் தண்ணீரே உலகம்...
உலகம் முழுமைக்கும் தண்ணீர்...
- ராம்ப்ரசாத் சென்னை (