காகிதங்கள் அழிந்த ஊரில்
வண்ணங்களின்
கடைசி இருப்பைக் கைக்கொண்டு
உடலில் ஒரு ஓவியம் தீட்டினேன்.
உடல் பாகங்கள் மறைந்து போய்
நிர்வாணத்தின் மீது
ஓவியத்தைப் போர்த்தினேன்.
ஓவியம் நின்றது
அசைந்தது
நடந்தது
நகர்ந்து கொண்டே இருந்தது
சாலைகளில்.
பின் தொடர்கிறேன்.
வயல்களைத் தாண்டி
செல்லரித்த
இருப்புப் பாதைகளின்
மீதேறி
வனாந்திரத்தின்
வாசலில்
ஓடிக்கொண்டிருக்கிறது ஓவியம்.
முந்தைய பெயர் சொல்லி
எத்தனை அழைத்தும்
செவிமடுக்காமல்
வனத்தின் உட்புகுந்து
வாசலைத் தன்
காலடிகளில்
பற்றிச் சுருட்டியபடி.
கீற்றில் தேட...
உடல் ஓவியம்
- விவரங்கள்
- ஆத்மார்த்தி
- பிரிவு: கவிதைகள்