இன்னும் ஈரமாய்த்தான் இருக்கிறது, அது!
இரக்கமே இல்லாத வண்டிச் சாரதி
அடித்துச் சாய்த்துவிட்டு
அரவமின்றிப் போய்விட்ட நாழிகையில்
உயிர் கசிந்து தெருவில் ஒழுகியோடிய
அணில் குஞ்சொன்றின் சடலம்
அகற்றப்பட்டும் எஞ்சியிருக்கும்
குருதியின் தடம்போல
இதயத்துள் இன்னும் மிச்சமிருக்கின்றன
நினைவுகளின் சுவடுகள்...
- லறீனா அப்துல் ஹக் (இலங்கை)