கீற்றில் தேட...

தன் நிழல் தொலைத்த இரவொன்றில்
சிதறிக்கிடந்த இறகு பற்றி
எல்லைகளற்ற காற்றோடு
இதமான பறக்கும் பயணம்.
உலகம் முழுதும் உலா வந்த பின்
பயணக்களிப்பில் என் பாதம் வந்தடைந்து
இலவச பயண அனுபவத்தை
எறும்பு சிலாகித்து சொன்னதை
எப்படி சொல்வேன் உங்களுக்கு
அதன் மொழியில்.

- ப.பார்த்தசாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)