தட்டுப் பட்டு
சிற்பங்களாய் செதுக்கப்படாமல்-
நிழல் கொடுக்கும்
கோயில் மண்டப தூண்களாக
உருப்பெறாது-
ஆற்றோரப் படித்துறைகளிலும்
பதிக்கப்படாது-
இளைப்பாறல்களுக்கு
எழுந்து நிற்கும்
சுமைதாங்கியாய்
முதுகு உயர்த்த தவறி-
சிறு சிறு சல்லியாய்
மழலை விரல்நுனியில்
தவழவும் தவறி-
வீட்டுக் கூரைக்குள்
முடங்கிப் போனது
கற்கள் மட்டும்தானா என்ன?