சொற்களற்று அமர்ந்திருக்கிறேன்
தூரங்களை
மடியில் போட்டு விட்டு
பறக்காதே
மடக்கி வடிக்க
வார்த்தைகள் இல்லை
கூட வானத்தையும்
கொட்டி விட்டுப் போனால் எப்படி
குகைக்குள் சிக்கிய
சுபாஷாகிறேன்
நீலம் பூசிய நிர்க்கதி இது
நீந்திப் பார்க்கும்
நிலவின் கனம் தாங்காது
கூட நட்சத்திரக் கூச்சல்கள் வேறு
மல்லாந்த மனதில்
மேகம் உதிர்க்கும் மௌனம்
தாங்காது கண்மணியே
புலம்புகிறேன் பார்
அடுத்த கவிதைக்காவது
ரூபம் பெற்று வந்து சேர் அரூபனா
- கவிஜி