கீற்றில் தேட...

இலக்கை எட்டிவிடும்
மேலாளருக்கு
ஏங்குகிறது நிர்வாகம்
எப்பொழுதும்
கால நேரம்
கடந்து உழைக்க.

இலக்கை
எட்டும் நேரம்
விடுமுறை எடுக்காத
பொறியாளருக்கு ஏங்குகிறது
மேலாண்மைத் துறை
எப்பொழுதும்
புதிய வாக்குறுதிகளில்
வசீகரித்து.

குறைந்த செலவில்
பொருட்களை வாங்க
ஏங்குகிறது கொள்முதல் துறை
எப்பொழுதும் உறுதியானதென
உபயோகிப்பவரை
நம்ப வைக்க.

கொடுத்த பொருட்களில்
கோபுரமென
யாவரையும் ஈர்க்க
இரவு பகலாக ஏங்குகிறது
வேலையாட்கள் துறை
எப்பொழுதும் வேதனைகளுக்கு
விடிவு கிடைக்குமென.

காணும் ஒரு
சொர்க்கமென
காண்பர்களை வியக்க வைத்து
விற்றுவிட ஏங்குகிறது
விற்பனைத் துறை
எப்பொழுதும்
கற்பனைக் காரணங்களில்
கண்டு முதல் ஈட்ட.

வேலை தேடும் வேலையிலே
வேலை செய்து
வீட்டார்களின் ஏக்கத்திற்காய்
விழுந்தடித்து ஓடி வந்து
விரும்பி வேலை செய்வதாக
வினோதமொன்று
எங்கும் நடக்கின்றது
எப்பொழுதும்
உள்ளொன்று வைத்து
புறமொன்றாக இருப்பதுதான்
இயல்பென வாழ்ந்து

- ரவி அல்லது