வண்ணத்துப் பூச்சி ஒன்று
அசைந்தாடுகிறது - பார்
நீ தான் நடக்கிறாய் சாலையில்...
---------------------------------------
எதுவும் இல்லை என்கிறாய்
இருக்கட்டுமே
இல்லாமலே....

------------------------------------
உன் பார்வையை அறிவேன்
இருக்கட்டும்
இன்னும் ஒரு முறை பார்
தேவதையாகிப் போகிறேன்...

--------------------------------

எப்போதும் கடக்கும்
சாலை தான் பரவாயில்லை
இப்போதெனக்கு சிறகு வேண்டும்
கடந்து போ...

-------------------------------

வெற்றுக் காலில்
நட
வாசம் உடுத்திப் பார்க்கட்டும்
வீதி...

-----------------------------

காதலாகி நிறைக்கிறாய் தெரியும்
நிலவைத் தீண்ட
சர்ப்பமாகிறேன் பொறு....

----------------------------
மது புட்டியின் போத்தலாய்
மீதமிருக்கிறேன்.
பாவம் பிரியப்பட்டவள் தானே....
---------------------------

- ஆனந்தி ராமகிருஷ்ணன்