இனி அந்த வாசலில்
எப்படி நிற்க
அவ் வீதியில் எவ்வாறு
நடை போடும்
இந்தக் கால்கள்
கருப்பு வெள்ளை கண்களில்
நிறம் பூக்காது
கொய்யா மரத்தில் ஏற
கால்களில்
றெக்கை இருக்காது
பக்கத்து வீடு எதிர் வீடு
என வீதியே
பிரியாவிடை கொடுக்கிறது
கேள்விக்கு
எங்கே செல்லும்
இந்த புறப்பாடு
நம் வீட்டுக்குள்
யாரோ வசிப்பார்கள்
இப்போது
நாம் தாம் யாரோ
கதவுக்கு
பூட்டு போடலாம்
வாழ்ந்த காலத்துக்கு...!
- கவிஜி