மகிழ முடியாத
சோகம் இருந்தது
அப்பொழுது.
மகிழ முடியாத
சோகமாக இருக்கிறது
இப்பொழுது.
மறக்க முடியாத
காட்சிகளாக
இருந்தது
அப்பொழுது.
மறக்க முடியாத காட்சிகளாக
இருக்கிறது இப்பொழுது.
குழந்தைகள் குழந்தைகளாகவே
அழுதார்கள் அப்பொழுது.
குழந்தைகள் குழந்தைகளாகவே
அழுகிறார்கள் இப்பொழுது.
அரசியல் நாய்கள்
சுயநலத்திற்கு
தருணம் பார்த்தது
அப்பொழுது.
அரசியல் நாய்கள்
சுயநலத்திற்கு
தருணம் பார்க்கிறது
இப்பொழுது.
கேட்க யாருமற்ற
கிரகம் பூமியென
அண்ணன்கள் உருவாக்கினார்கள்
அடிமைகளை அப்பொழுது.
ஆண்டை அண்ணன்கள்
யாவரும் அலறுகிறார்கள்
இப்பொழுது.
மக்களாசையென
நிகழ்த்திய கொடூரங்களை
தடுக்க எவருமில்லை
அப்பொழுது.
இயற்கை
கொடூரத்திற்குப் பிறகு
எல்லா அகங்கார மயிரும்
மழிக்கப்படுகிறது
இப்பொழுது.
நிகழ்த்திய
அதீத காட்சிகளில்
ஆஸ்கார் விருதுகளை
வென்றார்கள் அப்பொழுது.
இயற்கை வெளியிட்டிருக்கும்
இப்படத்திற்கு
எவர் தருவார் விருது
இப்பொழுது.
முன்னிருந்த
சமூகங்களின் வாழ்வைப் பார்த்து
வாழ்க்கையை மாற்றவில்லை
அப்பொழுது.
என்ன பாடம்
கற்று
மாறப் போகின்றோம்
நாம்
இப்பொழுது.
- ரவி அல்லது