இட ஒதுக்கீட்டில்
பாதி எட்டிவிட்டது
பார்க்கும் இடமெங்கும்
பெண்மயமென
அங்கலாய்ப்பவர்களுக்குத்
தெரிவதில்லை
குக்கரில்
வெந்து கொண்டிருக்கும்
பெண்ணியமும்
குரூர விசிலடிக்கும்
ஆணாதிக்கமும்

- பா.சிவகுமார்