பயம் போர்த்திய
நடையில்
பனிக்காற்று
நடுக்கத்தைக் கொடுத்தது
விடிகாலையில்
தயக்கம் கொள்ளுமாறு.
கொத்திக் கிழிக்கும்
வல்லூறுகளுக்கு
நேர காலமெல்லாம்
இல்லையெனும் அச்சம்
வீடு வரும்வரை
மன உளைச்சலைக் கொடுத்தது
பெண்ணெனவானதால்.
யாதொரு பங்கமற்று
கூடடைந்து விட்டாலும்
பயமற்று
பறக்க முடியாத துயரம்
பாட்டிக்கு வாய்த்துபோல
பேத்திக்கும் இருப்பது தான்
பெருந்துயரின் பேரவமானம்
யாவும் சாத்தியமாகும்
இந்நாளிலும்.
- ரவி அல்லது