நுரை ததும்பும் பேரிருள்
ஒளியற்ற உனது பிம்பத்தில்
நீளும் விரல் வரை
மீதமிருக்கும் உனது உருவம்
அங்குலம் அங்குலமாக அவிழும்
ஃபோட்டான்களற்ற
பத்துக்கு பத்து அறை இடுக்கில்
கண்களை மூடிக் கொள்கின்ற வரையில்
ஹார்மோன்களின் பெருவெடிப்பு நிகழும்
போகட்டும்
உடல் வேறு உயிர் வேறாய்
அவிழ்ந்து கிடக்கும் உன்னை
இருள் கூடும் பொழுதுகளில்
எவ்வழி கோர்ப்பேன்
அநேக இரவுகளில்
காஸ்மோஸ் கூடுகளைக் கலைக்கும்
நம்மைப் போன்ற அரூபிகளுக்கு
இருள் வேறு இரவு வேறு!
- ராஜேஷ்வர், சென்னை