கீற்றில் தேட...

காயத்தின் மீது
ஊர்ந்து கொண்டிருக்கும் அன்பை
சிறுபுல்லால் வருடி விடுகிறது
இந்த இரவு

இனி விடைபெற வேண்டியது
நீயும் தான்
ஆனால் அது
ஒரு கனவினைப்போல் இராமல்
விரல் நுனியின்
சிறு தீண்டலைப் போல்
மெய்யாக இருக்கட்டும்

அல்லது
விண்ணைப் பிரியும் நட்சத்திரத்தின்
கடைசி முத்தமிடலைப் போலாவது
இருந்து விட்டுப் போகட்டும்

- தங்கேஸ்